குருநாகல் வைத்தியசாலையில் 20 தாதிகளுக்கு டெங்கு நோய் இனங்காணப்பட்டுள்ளது




குருநாகல் வைத்தியசாலையின் தாதியர் உள்ளிட்ட வைத்தியசாலை அதிகாரிகள் 20 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையின் 7,3,57,46,47,56ஆம் இலக்க வாட்டுகளில் பணிபுரியும் தாதியர்களே இவ்வாறு டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்H1N1 காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமானோர் குருநாகல் வைத்தியசாலைக்கு தினமும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதாகவும்,இவர்களுக்கு போதியளவு சிகிச்சை வழங்குவதற்கு வசதிகள் இல்லாததால் நோயாளிகள் மற்றும் வைத்தியர்களும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நோயாளிகள் தங்குவதற்கு போதியளவு கட்டில் வசதிகள் இன்மையால் கதிரைகளில் அமர்ந்து சிகிச்சைப் பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும் குருநாகல் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.