வடக்கு ஆப்கானிஸ்தானின் பல்கா
பிராந்தியத்திலுள்ள இராணுவ முகாம் மீது தலிபான் அமைப்பினர் மேற்கொண்ட
தாக்குதலில் 50 இராணுவத்தினர் பலியாகியுள்ளனர். நேற்றைய தினம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆப்கான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் தாக்குதலுக்கான பொறுப்பை தலிபான் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஆப்கன் வீரரின் ஆடையை உடுத்திக் கொண்டு வந்த தீவிரவாதிகள் 10 பேர் இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாகவும்,அதில் 7 பேர் தாக்குதலின் போது உயிரிழந்துள்ளதுடன், மீதமுள்ள 3 பேரில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள ஆப்கான் இராணுவத்தின் உயரதிகாரிகள் ஒருவரை மட்டும் ராணுவத்தினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த மார்ச் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 50 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
