டெங்குக் காய்ச்சல் காரணமாக கிண்ணியா குறிஞ்சாங்கேணியைச் பொலிஸ் கான்ஸ்டபிளான அபூ ஹனீபா நயீம் (வயது 44) என்பவர் இன்று செவ்வாய்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா தள வைத்தியசாலையில் கடந்த 13ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இவர் டெங்குக் காய்ச்சல் கண்டறியப்பட்டதால் இவருக்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்க வேண்டி வந்தது. இதனால் நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
ஜனவரி முதல் இதுவரையில் திருகோணமலை மாவட்டத்தில் 17 பேர் டெங்குக் காய்ச்சலினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்