அம்பாறை இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வாங்காமத்தில் வழங்கப்பட்ட கந்தூரி உணவு நஞ்சானது தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சமையல்காரர்களும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை 5 ஆம் திகதி இறக்காமம் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக திடீரென ஏற்பட்ட அனர்த்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்கள் உண்ட உணவை சமைத்த சமையல்காரர்களான அக்கரைப்பற்று முதலாம் பிரிவைச் சேர்ந்த சுபைதீன் முன்சீக், அலியார் றிகாஸ் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் தமனை பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந் தனர்.
இவர்கள் இருவரையும் எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்த நிலையிலேயே இவர்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
