மூதூரில் பாம்பு தீண்டி அப்துல் வாஹித் வபாத்

மூதூர் பாலநகரைச் சேர்ந்த அல்ஹாஜ்  அப்துல் வாஹித் (60) என்பவர் பாம்பு தீண்டி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை உயிர் இழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் மூதூர் வேதந்தீவு பகுதியில் காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்த போது வாகனம் ஒன்றில் நசுங்குண்ட பாம்பொன்று உயிருக்கு போராடிய நிலையில் வீதியில் துடித்து கொண்டிருந்துள்ளது. 

இதனை அவதானித்த குறித்த நபர் அந்த பாம்பினை கையினால் எடுத்து காட்டுக்குள் விடுவதற்கு முயற்சித்த போது அப்பாம்பு அவரை தீண்டியுள்ளது. இதனையடுத்து அவர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

 உயிர் இழந்தவரின் ஜனாஸா நேற்றிரவு மூதூர் பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்