முஸ்லிம்களின் வியாபார நிலையங்களை சூறையாட திட்டம்- அரசு மௌனம்


முஸ்­லிம்­களை வர்த்­தகத் துறை­யி­லி­ருந்து தூர­மாக்கும் நட­வ­டிக்­கை­களை இன­வாதக் குழுக்கள் மேற்­கொண்டு வரு­கின்­றன என்­ப­தற்கு போர்வை நகரில் நடத்­தப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­குதல் சான்­றாகும். 

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் மீது அர­சாங்கம் மௌனித்து இருப்­பதே இதற்கு கார­ண­மாகும். முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் இதற்­கெ­தி­ராகக் குரல் கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்­சரும் முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியின் செய­ல­தி­ப­ரு­மான ஏ.எச்.எம். அஸ்வர் தெரி­வித்­துள்ளார்.

கொட­பிட்­டிய, போர்வை நகரில் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­குதல் தொடர்­பாக வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். அவர் தனது அறிக்­கையில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது;

முஸ்­லிம்­க­ளுக்கும் முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்­திற்கும் பாதுகாப்பு வழங்­கு­வ­தாகக் கூறியே நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்­தது. ஆனால் அர­சாங்­கத்தின் உறு­தி­மொ­ழிகள் காற்றில் பறக்­க­வி­டப்­பட்டு விட்­டன.

போர்வை நகரில் மூன்று கடைகள் குண்டு வீசி எரிக்­கப்­பட்­டுள்­ளன. மஹிந்த ராஜ­பக் ஷவின் காலத்தில் போன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் தொட­ராது என்று மேடையில் குரல் கொடுத்­த­வர்கள், மஹிந்­தவை விமர்­சித்­த­வர்கள் இன்று முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் தாக்­கப்­ப­டும்­போது பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இச்­சந்­தர்ப்­பத்தில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் அனை­வரும் கொள்கை முரண்­பா­டு­களைப் புறந்­தள்ளி தேசி­ய­பட்­டியல், பிராந்திய ரீதியிலான பிளவுகளை மறந்து ஒன்றுபட வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

A.R.A. FAREEL