வாங்காமம் முகைதீன் ஜும் ஆ பள்ளிவாசலில் கந்தூரி வழங்கிய சமயம் உணவு நஞ்சானதில் மூவர் மரணித்ததுடன் ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இதற்கமைய சமையல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் சமையலுக்காக மாட்டிறை அறுத்த மௌலவியிடமும் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பள்ளிவாசல் நிர்வாகிகளிடமும் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் பயன்படுத்தப்பட்ட பொருட்களை விநியோகித்தவர்கள் தொடர்பிலும் பொலிசார் தகவல்களை திரட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்