உலக சம்பியன் பட்டம் வென்ற கண்டி மாணவி சைனப்

NEWS
0
பத்து வருடங்களின் பின்னர் செஸ் போட்டிகளில் 2000 ஆம் பிரிவின் கீழ் மகளிருக்கான உலக சாம்பியன் பட்டத்தை இலங்கை வீராங்கனை சைனப் சவ்மி சுவீகரித்துள்ளார்.

சர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த செஸ் போட்டிகள் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை இத்தாலியின் நடைபெற்றன. இந்த செஸ் போட்டிகளில் 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 வீராங்கனைகள் கலந்துகொண்டிருந்தனர்.

வெவ்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த செஸ் போட்டிகளின் 2000 ஆம் பிரிவின் கீழ் மகளிருக்கான போட்டிகளில் சைனப் சவ்மி சாம்பியன் பட்டம் வென்றார். சர்வதேச செஸ் போட்டிகளில் இலங்கை வீராங்கனை ஒருவர் சம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
Attachments area
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default