புத்தகங்களை சிறந்த முறையில் பயன்படுத்தினால் பணப்பரிசு - கல்வித் திணைக்களம்

NEWS
0
மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடப்புத்தகங்ளை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் பயன்படுத்தும் மாணவர்களுக்கு பணப்பரிசு வழங்க கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது 15 வீதமான புத்தகங்களே மீண்டும் பயன்படுத்தும் வகையில் உள்ளதாகவும்,இதனை 25 வீதமாக அதிகரிப்பதற்காகவே இந்தப் பணப்பரிசு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்குவதற்காக கல்வித் திணைக்கமானது சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வருடத்திற்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 10இலட்சத்து 3800 ரூபாய் நிதி செலிவிடப்பட்டுள்ளதாகவும்,புத்தகங்களை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்குமானால் இந்தி நிதி செலவினை குறைக்க முடியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default