சவுதி அரேபியாவுக்கு கார் ஓட்டுனர் பணிக்கு சென்ற நபரை அவர் முதலாளி தீவைத்து எரித்ததில் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தை சேர்ந்தவர் Abdul Qader (26) இவர் Farhan மற்றும் Sayeed என்ற இடைத்தரகர்களிடம் தன் வேலைக்காக 1 லட்சம் பணம் கட்டி சவுதி அரேபியாவுக்கு வந்துள்ளார்.
அங்கு Saleh Ali Ahmed என்பவர் வீட்டில் கார் ஓட்டுனர் பணியில் கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதி 2015ல் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 28ஆம் திகதி Qader இந்தியாவில் இருக்கும் தனது சகோதரர் Mohammadயிடம் போனில் பேசியுள்ளார்.
அப்போது, தன் முதலாளி கடந்த ஆறு மாதங்களாக தனக்கு சம்பளம் தரவில்லை எனவும் தான் இந்தியா திரும்ப விரும்புவதாகவும் ஆனால் அவர்கள் தன்னை விட மறுப்பதாகவும் கூறியுள்ளார்.
அதன் பின்னர், Qaderக்கும் அவர் வேலை செய்யும் முதலாளிக்கும் ஏற்ப்பட்ட வாக்குவாதத்தில் அவர் Qader மீது தீவைத்து எரித்ததாக தெரியவந்துள்ளது.
பின்னர் மீண்டும் கடந்த 31ஆம் திகதி Mohammadக்கு போன் வந்துள்ளது. அதில் பேசிய நபர் உங்கள் சகோதரர் Qader உடலில் 75 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் Mohammadம் அவர் குடும்பத்தாரும் Qaderஐ தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. இதனிடையில், இது குறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் Qaderஐ தொடர்பு கொள்ள முடியும் என அவர் குடும்பத்தார் காத்திருக்கிறார்கள்.
இதே போல ஹாசினா பேகம் என்னும் இந்திய பெண்ணை சில வாரங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவில் அவர் முதலாளி மூன்றாவது மாடியிலிருந்து கீழே தள்ளிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
