அம்பாறை, இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட மாணிக்கமடு,
மாயக்கல்லி மலையடிவாரத்திலுள்ள முஸ்லிம் காணிகளை ஆக்கிரமிப்பு
செய்யும் நடவடிக்கையின் பின்னணியில் அமைச்சர் தயா கமகே இருப்பதாகவும்
அதனாலேயே இந்த தேரர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை செய்யவில்லை என
பானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குற்றம்
சுமத்தியுள்ளர்.
அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. அம்பாறை,
இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட மாணிக்கமடு, மாயக்கல்லி
மலையடிவாரத்திலுள்ள காணிகளை இரண்டாவது தடவையாகவும்
ஆக்கிரமிக்கும் முயற்சியை நேற்று வியாழக்கிழமை பௌத்த பிக்குகள்
மேற்கொண்டுள்ள நிலையில் தனியார் காணிகளில் அத்துமீறி நுழைந்தவர்களை
உடனடியாக கைது செய்ய நடவடிக்கை பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை .
அம்பாறை,
இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட மாணிக்கமடு, மாயக்கல்லி
மலையடிவாரத்தில் உள்ள காணியில் புத்தர் சிலை ஒன்றை நிறுவியிருந்த
நிலையில் நேற்றைய தினம் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியில் விகாரை
ஒன்றை அமைப்பதற்கு பௌத்த பிக்குகளும் மேலும் சிலரும் முயற்சிகளை
மேற்கொண்டுள்ளனர்.
எனினும் ஸ்தலத்திற்கு
விரைந்த இறக்காமம் பிரதேச மக்கள் மேற்படி விகாரை அமைக்கும்
நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்ததுடன் பொலிஸாரின்
கவனத்துக்கும் கொண்டு சென்றனர்.இச் சம்பவம் காரணமாக
இப்பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பொலிஸார்
தலையீடு செய்து விகாரை அமைக்கும் பணிகளை தடுத்து
நிறுத்தியுள்ளனர். எனினும் அவர்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கை
எடுக்கவில்லை. அமைச்சர் தயாகமகே இந்த பின்னணியில் இருப்பதால் தேரர்களுக்கு
எதிராக எதுவும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அம்பாறை
முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற தயாவும்
முஸ்லிங்களின் வாக்குகளை பெற்று ஆட்சி பீடம் ஏறிய நல்லாட்சியும் முஸ்லீம்
மக்களுக்கு செய்யும் கைமாறு இதுதானா என தான் கேட்கபதாக அவர் மேலும்
குறிப்பிட்டுள்ளார்.
