ஹஜ் பயணத்தை உறுதிப்படுத்த வேண்டிய இறுதி தினம் நாளை ஆகும்








இவ்­வ­ருடம் புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்ற திட்­ட­மிட்­டுள்ள பய­ணிகள் தமது பய­ணத்தை உறுதி செய்து கொள்­வ­தற்­கான இறுதித் திகதி நாளை  21 ஆம் திக­தி­யென முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்களம் அறி­வித்­துள்­ளது.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் அனுப்பி வைத்­துள்ள பய­ணத்தை உறுதி செய்யும் கடிதம் கிடைக்கப் பெற்­ற­வர்கள் 25 ஆயிரம் ரூபா மீள­ளிக்­கப்­ப­டக்­கூ­டிய கட்­ட­ணத்தைச் செலுத்தி தமது பய­ணத்தை உறுதி செய்து கொள்ள வேண்­டு­மென கேட்­கப்­பட்­டுள்­ளார்கள்.

இவ்­வ­ருடம் ஹஜ் பயணம் மேற்­கொள்­வதை இது­வரை 1800 விண்­ணப்­ப­தா­ரிகள் உறுதி செய்­துள்­ளார்கள் எனவும் ஹஜ் முக­வர்கள் நிய­மனம் இம்­மாத இறு­தியில் வழங்­கப்­ப­டு­மெ­னவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரி­வித்தார்.

இறுதி நேர சிர­மங்­களைத் தவிர்த்துக் கொள்­வ­தற்­காக திணைக்­க­ளத்தின் கடி­தங்கள் கிடைக்­கப்­பெற்­றுள்ள விண்ணப்பதாரிகள் உடனடியாக தமது பயணத்தை உறுதி செய்து கொள்ளுமாறும் வேண்டியுள்ளார்.

 ARA.Fareel