பாராளுமன்ற கனவை அதாஉல்லா கனவிலும் நினைக்க முடியாது; தவம் காட்டம்



எம்.ஜே.எம் சுஹைல்

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா தான் மீண்டும் பாராளுமன்றத்திற்கு செல்லலாம் என்ற விடயத்தை கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார் மகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்.

நேற்று அக்கரைப்பற்றில் இடம்பெற்ற அரசியல் சந்திப்பு நிகழ்வு ஒன்றில் கருத்துரைக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார், மேலும் குறிப்பிட்ட தவம்,

கிழக்கும் வடக்கும் சேரப்போகிறது, ரணில் நோர்வேயின் எடுபிடி என்று சிறுபிள்ளைத்தனமாக கூறிக்கொண்டு மக்கள் மனதில் வஞ்சகம் வளர்க்கும் பேச்சுக்களை பேசிவரும் அதாஉல்லா கடந்த தேர்தலில் படுதோல்வியடைந்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை ஆனால் தான் தோற்கவில்லை மக்கள் என்னை கொஞ்சம் துாரமாக்கியுள்ளதாக வெட்கமில்லாமல் பேசும் அதாஉல்லா மக்கள் மனதில் என்றும் இடம்பிடிக்க மாட்டார், மாறாக பொய் விடயங்களை பேசி மக்களை குழப்புவதை நிறுத்த வேண்டும். என்றார்.