இலங்கைக்கு ஜீ.எஸ்.பி வரிச்சலுகை வழங்குவது குறித்த வாக்கெடுப்பானது இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
தற்போதைய இலங்கை அரசினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கைக்குள் நடைமுறைப்படுத்தப்படும் ஜனநாயக செயற்பாடுகள்,சட்டத்தை நடைமுறைப்படுத்தல்,மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது தெளிவு படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் வாக்கெடுப்பினை அடுத்து இலங்கைக்கு ஜீ.எஸ்.பி வரிச்சலுகை கிடைக்கும் நம்பிக்கை உள்ளதாகவும் அமைச்சர் ஹர்ஸ டி சில்வா நம்பிக்கை வெளியிட்;டுள்ளார்.
