பாகிஸ்தானின் உயர்மட்டக் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம்

NEWS
0 minute read


பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 12 பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.
கடந்த 23ம் திகதி இலங்கை வந்த இந்த குழு, நாளை மறுதினம் வரையில் இலங்கை தங்கி இருந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். இலங்கையின் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பில் ஆராய்வதே இந்தக் குழுவின் நோக்கமாகும்.
இதன்படி பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு தளங்களை அறிந்து, தொடர்புகளை மேம்படுத்த இந்தக் குழு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பாகிஸ்தானின் உயர்மட்டத் பாதுகாப்புத் தரப்பினர் பலர் பங்கேற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Top