ரிஷாட் ராஜினாமா? ; நடக்கவே நடக்காது

கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தன்னுடைய அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக வரும் தகவல்களில் உண்மையில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

வில்பத்து சரணாலயத்துக்கு வடக்காக உள்ள காடுகளில் நான்கு காடுகளை, பாதுகாப்பான சரணாலயங்களாக பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2017 மார்ச் 24ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பை தெரிவித்தே, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தன்னுடைய அமைச்சுப் பதவியைத் துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 
 
இந்நிலையில் அக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரை தொடர்பு கேட்டதற்கு அமைச்சர் ரிஷாட் ஒரு போதும் அரசை விட்டு வெளியேறமாட்டார் என்றும் பேச்சுவார்த்தைகள் மூலமே பிரச்சினைகளைத் தீர்ப்பார் என்றும் குறிப்பிட்டார். இதற்கமைய அமைச்சர் ரிஷாட் தனது பதவியை துறப்பது நடக்கவே நடக்காது என்பது தெளிவாகியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்