கிண்ணியாவில் மது போதையில் கத்திக் குத்து

கிண்ணியா அகமட் லேன் பகுதியில் 21 வயதான முஸ்லிம் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் கிண்ணியா அகமட் லேன் பகுதியைச் சேர்ந்த ஏ.முஹம்மத் முஹ்ஸித் என்பவரே படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

நண்பர்கள் மூவர் மது அருந்தியிருந்த நிலையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டதாகவும் இதனால் கத்திக்குத்தில் ஈடுபட்டதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்