இறக்காமம் மாயக்கல்லி மலைப் பிரதேசத்தில் பௌத்த பிக்குகள் முஸ்லிம்களின் காணிகளை ஆக்கிரமித்து அங்கு விகாரை அமைக்க முயற்சித்ததால் இன்று பதற்ற நிலை தோற்றம் பெற்றது.
அவ்விடத்திற்கு விரைந்த பொலிசாரும் அரசாங்க அதிகாரிகளும் இதில் தலையிட்டு பிக்குகளின் முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளனர். ஏற்கனவே
இதே மலையில் புத்தர் சிலையை வைத்துள்ள பிக்குகள் அப் பகுதியில் தற்போது
விகாரை அமைப்பதற்கு நிலத்தை செப்பனிட்டுள்ளதையடுத்தே இந்த பதற்றநிலை
தோன்றியுள்ளது.
தற்போது பிக்குகள் அங்கிருந்து சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
