ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் MTM பர்சான் சூனியம்
மற்றும் அல் குர்ஆனுக்கு முரண்படும் ஸஹீஹான ஹதீஸ்கள் விடயத்திலும் SLTJ
அமைப்பு சத்தியத்தை விட்டு வழிதவறிவிட்டதாக கூறி குறித்த அந்த
அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.
இவர் SLTJ யின் சாதாரண ஒரு தாயி அல்ல. இவர் Sltj யின் உத்தியோகபூர்வ மாதாந்த
சஞ்சிகையின் பிரதம ஆசிரியராவார் மற்றும் அந்த அமைப்பின் துணைத் தலைவராக
நீண்ட காலம் செயற்பட்டு பின்னர் அதன் தேசிய தலைவராக இருக்கின்ற இந்த
வேளையிலே இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை பர்சானின் விலகல் குறித்து SLTJஅமைப்பு விளக்கமளித்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது,
சகோ
பர்சான் அவர்கள் சூனியம் விஷயத்திலும் குர் ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்
விஷயத்திலும் ஜமாஅத்தின் கருத்திற்கு மாற்றமாக இருப்பதாகக் கூறி
அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.
இந்த
ஜமாஅத்தில் இருக்கும் எந்த தாயிக்கும் ஆய்வு செய்யக்கூடிய சுதந்திரம்
இருக்கிறது. ஜமாஅத் நிலைப்பாட்டிக்கு மற்றமான முடிவு எடுக்கவும் சுதந்திரம்
இருக்கிறது. ஆனால் ஒரு கருத்தை ஆய்வு செய்து மாற்றுக் கருத்து வந்தால் அதை
சக நிர்வாகிகளுக்கோ அல்லது தாயிக்களுக்கோ தெரியப்படுத்தி அது குறித்து
கலந்து ஆலோசிப்பதற்கு இந்த ஜமாஅத்தில் முழு சுதந்திரம் இருக்கிறது.
தான்
எடுத்த மார்க்க நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவு படுத்துவதாக அறிவித்து
உள்ளார். உண்மையில் அவர் தான் எடுத்த முடிவில் உறுதியானவராக இருந்தால்
மக்களுக்கு தெளிவுபடுத்த முன்னால், சக நிர்வாகிகளுக்கும் தாயிக்களுக்கும்
அவரின் ஆய்வை சமர்பித்து தெளிவுபடுத்த முயற்சி செய்து இருக்க வேண்டும்.
சகோ
பர்ஸான் அவர்கள் சாதாரண தாயியாக மட்டும் இருக்கவில்லை தலைமை நிர்வாகியாக
இருந்தார். நினைத்து இருந்தால் ஆய்வு கூட்டத்தை கூட்டவோ அல்லது சக
நிர்வாகிகளிடம் மசூராவில் இது குறித்து பேசவோ போதிய அளவு சந்தர்ப்பம்
இருந்தது, ஆனால் அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை.
இவ்வளவு காலமும் இது குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசியது இல்லை.
அவருடைய
கொள்கையை மக்கள் மத்தியில் முடிந்த அளவு தெளிவுபடுத்துவதாக குறிப்பிட்டு
உள்ளார். எம்மிடம் தான் தெளிவுபடுத்தவில்லை மக்கள் மத்தியில் சரி
தெளிவுபடுத்துங்கள்.
நீங்கள் எந்த அளவுக்கு
தெளிவுபடுத்துவீர்களோ அதைவிட பல மடங்கு வீரியமாக மக்களுக்கு நாமும்
சத்தியத்தை தெளிவுபடுத்த தயாராகவே உள்ளோம் என்பதை அறியத்தருகிறோம்
