சிறு தீவை 30 வருட குத்தகைக்கு வழங்கிய மகிந்த!!



யாழ்ப்பாணம் மண்டைதீவிற்கு அன்மையில் உள்ள சீறுத்தீவு ஒன்றை மகிந்த ராஜபக்ஸ, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 30 வருட குத்தகைக்கு வழங்கியுள்ளது தொடர்பில் தற்போது தெரிய வந்துள்ளது.

குறித்த தீவு, வர்த்தக நோக்கம் ஒன்றிற்காக 15 ஏக்கர் நிலம் இவ்வாறு 30 ஆண்டுகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் குறித்த நிலங்கள் மாகாண சபைத் தேர்தல் காலத்திற்கும் முன்பு இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

குறித்த காலத்தில், முன்னாள் வட மாகாண ஆளுநரின் பரிந்துரைக்கமைய இந்த நிலம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மகிந்த ராஜபக்சவினால் வழங்கப்பட்ட 4 பக்கம் கொண்ட அனுமதிக்கடிதம் தற்போது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரிவரினால் பெறப்பட்டுள்ளது.
இதன்படி, ஒப்பந்தத்தின் பிரகாரம் 15 ஏக்கர் நிலம், ஆண்டு ஒன்றிற்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த குத்தகை அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.