இராணுவ ஒப்பந்தத்தை மீறி பாக்கிஸ்தான், இந்திய எல்லைகளில் தொடர்தாக்குதலை மேற்கொண்டு வருவதால் குறித்த பகுதிகளில் உள்ள 1500 இற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
பாக் இராணுவம், 3 ஆவது நாளாக,இந்திய எல்லைகள் மீது தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. கடந்த 16 மணித்தியாளத்திற்குள் எல்லையில் அமைந்துள்ள 4 குக்கிராமங்களம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்புக்கள்ளாகியுள்ளனர்.
மேலும் குறித்த தாக்குதலால் இருவர் பலியாகி உள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பகுதிகளில் உள்ள 50 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்குமாறு மத்திய உள்துறை இணையமைச்சர் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்தாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
