59 கோடியே 54 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டைகளுடன் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெள்ளவத்தை பிராந்திய மோசடி ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 99 கிலோகிராம் 235 கிராமும் நிறைக்கொண்ட வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை ஒரு கிலோகிராமின் பெறுமதி 60 இலட்சம் ருபாய் எனவும் அதனடிப்படையில், கைப்பற்றப்பட்ட வல்லப்பட்டைகளின் மொத்தப் பெறுமதி 59 கோடியே 54 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை மாவனெல்ல பிரதேசத்திலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெள்ளவத்தை மோசடி தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் அவரை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு கிராண்ட்பாஸ் பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
