கூகிள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான சுந்தர் பிச்சையின் ஒரு நாள் வருமானம் இலங்கை ரூபாயில் 8 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கூகிளின் தகவலுக்கு ஏற்ப கடந்த ஆண்டில் அவரின் வருமானம் 6.5 இலட்சம் டாலர்கள் ஆகும்.
அத்துடன் அவருக்கு வழங்கப்பட Allowance/இழப்பீடு தொகையானது 200 மில்லியன் டாலர்கள் ஆகும். கூட்டிப் பிரித்து பார்த்தால் ஒரு நாள் வருமானம் 8 கோடி இலங்கை ரூபாய்க்கும் அதிகமாகும் . பெயரிலே பிச்சை இருந்தாலும் அவரின் திறமை பிச்சை எடுக்கவில்லை.
எம்மில் சிலருக்கு பெயரில் சில சறுக்கல்கள் இருந்தால் மாற்றிக் கொள்பவர்களும் உண்டு. சொல்லிக் கொள்ளாதவர்களும் உண்டு.
மேலும், கூகிள் நிறுவனத்தின் தோற்றம் வளர்ச்சி சம்பந்தமாக திரு. சுந்தர் பிச்சை சுருக்கமாக தெரிவித்த கருத்துக்கள் காணொளியாக இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இது எமது செய்தி நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. T.S.B. விக்டர் அவர்கள் அமெரிக்காவில் சுந்தர் பிச்சையை சந்தித்த போது எடுத்துக் கொண்டது. ஒரு தமிழனாக சுந்தர் பிச்சையை பாராட்டுங்கள்.
