துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் எரிந்து சாம்பல்



ஷார்ஜா, ஹம்ரியா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பனாமா நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய் ஏற்றும் கப்பலில் அதிகாலை சுமார் 5.30 மணியளவில் தீப்பிடித்தது. இதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயமடைந்தனர், 16 கப்பல் ஊழியர்கள் காப்பாற்றப்பட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் மிகத்தீவிரமாக போராடி பிற கப்பல்களுக்கு தீ பரவாமல் தடுத்தனர் என்றாலும் இன்று பகல் வரை அந்தக் கப்பலிலிருந்து சிறியளவில் தீ கசிந்து கொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் பெட்ரோல் கடலில் சிந்தி பரவுவதையும் சுற்றுச்சூழல் பாதிப்படைவதையும் வெற்றிகரமாக தடுத்ததாக ஷார்ஜா தீயணைப்புத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Source: Gulf News