அக்கரைப்பற்று ஜம்மியதுல் உலமா மற்றும் தவ்ஹீத் அமைப்புக்களின் கவனத்திற்கு!

அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன்பதாக வைக்கப்பட்ட பதாதை தொடர்பில் ஏலவே எமது தளத்தில் புகைப்படம் மூலம் தெரிவித்திருந்தோம்.

நீயா என்ற தொலைக்காட்சி தொடரின் விரசமான பெரிய பதாதை வைக்கப்பட்டிருந்தது, ஆனால் அக்கரைப்பற்று பள்ளிவாசல்கள் மற்றும் தவ்ஹீத் அமைப்புக்கள் மற்றும் இஸ்லாமிய பெருந்தகைகள் இதனை கருத்திற் கொள்ளவில்லை இந்த தெலைக்காட்சி சீரியலுக்கான பாரிய பதாதைகள் வைக்கப்படுவது தொடருகிறது. நீயாவை தொடர்ந்து இப்பொழுது இன்னுமொரு தொலைக்காட்சி சீரியலுக்கான பதாதை வைக்கப்பட்டுள்ளது.


இதில் முக்கிய விடயம் என்னவென்றால் இரவு நேர தொலைக்காட்சி சீரியலுக்கு அடிமையாக்கும் தொலைக்காட்சி நிறுவனங்கள் பெண்களை வீட்டு வன்முறைகளுக்கு துாண்டுவது மாத்திரமல்லாமல் பெண்களின் ஆடைக்காலாச்சாரத்தையும் மாற்றுகிறது. இது மாத்திரமின்றி இரவு நேரங்களில் அல் குர்ஆனை விட்டும் துாரமாக்குகிறது.

இந்த தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பாகும் சக்தி ரீ.வியானது அல்குர்ஆனை வைத்து பூஜை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.