ராஜஸ்தான் மாநிலத்தில் நபர் ஒருவர் இறந்துபோன அல்கொய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு ஆதார் கார்டு கோரி விண்ணப்பித்துள்ளார். Bhilwara மாவட்டத்தை சேர்ந்த Saddam Hussain Mansuri (25) என்பவர், ஒசாமா பின்லேடனுக்கு ஆதார் கார்டு எடுப்பதற்காக, அவர் குறித்த படிவங்களை சமர்ப்பித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து அறிந்த பொலிசார் சதாமை கைது செய்துள்ளனர், சட்டத்துக்கு புறம்பான முறையில் செயல்பட்ட குற்றத்திற்காக இவர் மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மேலும், நீதிமன்ற அனுமதியோடு காவலில் எடுத்து சதாமை விசாரிக்க முடிவு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
