சமகால இளைஞர்கள் ஆளூமைமிக்க சமூகமாக மாற்றமடைய வேண்டும்



ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

வீடியோ : பொறியியலாளர் நாபீரின் உரை :- www.youtube.com/watch?v=HueYTjP9hik&feature=youtu.be

அண்மைக்காலமாக அம்பாறை இளைஞர்கள் மத்தியில் கிரிக்கட்டின் மோகம் அதிகரித்து காணப்படுகின்றது. இளைஞர்களை பிரதி பிதித்துவப்படுத்துகின்ற விளையாட்டு கழகங்களை எடுத்துக்கொண்டால் அவர்களால் கிரிக்கட் விளையாட்டுக்கு கொடுக்கப்படுகின்ற ஆர்வம் அதிகரித்து கொண்டே செல்கின்றது. ஆனால் மிக முக்கியமாக இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியது விளையாட்டு கழகங்களையும் இளைஞர் அமைப்புக்களையும் பிரதி நிதித்துவப்படுத்தி இயங்குகின்ற அமைப்புக்கள் கிரிக்கட் விளையாட்டுக்கு மட்டும் ஆர்வம் செலுத்த வேண்டும் என்பதை முக்கியமான விடயமாக எடுக்க கூட்டாது.

மாறாக இளைஞர்கள் என்றால் யார்.? அவர்களிடம் இருக்க கூடிய சக்தி, ஆளுமை, திறன், என்ன? என்பவைகளை பற்றி இன்றைய இளைஞர்கள் சிந்தித்து ஆளுமைமிக்க சமூகமாக மாற்றமடைந்து செயலாற்ற வேண்டிய கட்டாய தேவைப்பாடு அவர்களுக்கு இருக்கின்றது என சமூக சேவைகள் நிறுவனமான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான அல்-ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் மாளிகைக்காடு றியல்பவர் விளையாட்டு கழகத்திற்கு கழக சீருடை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து அங்கு உரையாற்றிய பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர்…..பாடசாலைகளில் கல்வி கற்கின்ற பொழுது எவ்வாறு அங்கே கவனம் செலுத்தப்படுகின்றதோ.? அதே போன்று வீட்டிலே தாய், தகப்பனுக்கு எவ்வாறு கட்டுப்பட்டு எங்களுடைய நாளாந்த வேலைகளை செய்வதை போன்றும், விளையாட்டுதுறைகளின் மீது இளைஞர்கள் வைத்திருக்கின்ற ஆர்வத்தினை போன்று இளைஞர்கள் ஏனைய விடயங்களிலும் தாக்கத்தினை செலுத்துகின்ற இளைஞர் சமூகமாக மாற்றமடைய வேண்டும். முழுக்க விளையாட்டில் மட்டுமே எமது காலத்தை செலவு செய்வதனை தவிர்த்து தாங்கள் பிரதி நிதித்துவப்படுத்துகின்ற குடும்பத்திற்கு சிறந்த நற்பன்புள்ள இளைஞனாகவும், பிள்ளையாகவும், நல்லதொரு சமூக உறுப்பினராகவும் வருவதற்கு இளைஞர்கள் முயற்சிக்க வேண்டும்.

இன்று கூடுதலான இளைஞர்கள் பாடசாலை முடிவடைந்து வீடு திரும்பியவுடன் உடனடியாக கிரிக்கட் விளையாடுவதற்காக மைதானத்தினை நோக்கி செல்கின்ற இளைஞர் சமூகமாகவும், பாடசாலை சமூகமாகவுமே வளர்ந்து வருகின்றது. வீடுகளில் இருக்கின்ற பல்வேறு வேலைகளை பற்றிக்கூட கவனிப்பதிலை. தாய் தகப்பனை கூட கவனிப்பதில்லை. இவ்வாறான நிலைமைகள் சமகால இளைஞர் சமூகத்திலிருந்து முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

எமது வாழ்க்கையில் நாங்கள் செலவு செய்ய இருக்கின்ற நேரங்களை பகுதி பகுதிகளாக பிரித்து விளையாட்டுக்கென்றும், கல்விக்கென்றும், ஏனையவைகளுக்காகவும் செயலாற்ற பழகிகொள்ளவதோடு, விளையாட்டு துறையினையும் முன்கொண்டு செல்ல வேண்டும். முக்கியமாக இன்றைய இளைஞர் சமூகம் காலத்தின் கட்டாய தேவையினை கருத்தில் கொண்டு சமூகம் சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றுவதற்கு பழகிகொள்ள வேண்டும்.

சமகாலத்தில் எமது பிரதேசங்களில் தாக்கம் செலுத்துகின்ற டெங்கு ஒழிப்பு சம்பந்தமான பிரச்சனைகள் போன்றவற்றுக்கு ஒத்துளைத்து செயற்பட கூடிய இளைஞர் சமூகமாக எங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அதே போன்று எந்தளவிற்கு நாங்கள் விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ.? அதே போன்று எங்களுடைய மார்க்க விடயங்கள், ஐந்து நேர தொழுகை விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க கூடிய இளைஞர் சமூகமாக மாற வேண்டும். எங்களுடைய எந்த செயற்பாட்டினாலும் நாங்கள் பின்பற்றுகின்ற மார்க்க விழுமியங்கள் பாதிப்படைந்து விடக் கூடாது.

விளையாட்டுக்கு வயது நேரம் கிடையாது. விளையாட்டினை நாங்கள் ஐம்பது வயதினை தாண்டினாலும் விளையாடிக்கொள்ளலாம். அல்லது மரணிக்கும் வரைக்கும் விளையாடலாம். ஆனால் உங்களுடைய எதிர்கால வேலை வாய்ப்புக்கள், எதிர்கால திட்டங்கள் என்பவற்றினை இளைஞர்களாக இருக்கின்ற பொழுது நாங்கள் சரியான திட்டமிடலுடன் குறிப்பிட்ட காலத்தினை எட்டுகின்ற பொழுது அதனை சாதித்த இளைஞர் சமூகமாகவும், எமது தாய், தந்தைக்கு சிறந்த பிள்ளைகளாக எங்களை பிரதி நிதித்துவபடுத்துகின்ற சமூகத்தால் நாங்கள் பார்க்கப்படுகின்ற சமூகமாக மாற்றமடைவது எமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

பதினெட்டு வயதினை தாண்டியவுடன் சுயமான சிந்தனையில் தொழில் செய்ய கூடிய இளைஞர் சமூகமாக எவ்வாறு நாங்கள் மாற்றமடைய வேண்டும்.? தொழிலுக்கு தேவையான எமது கல்வி தகமைகளை நாங்கள் எவ்வாறு விருத்தி செய்து கொள்ள வேண்டும்.? என்பவைகளை பற்றி முக்கியமாக சமகாலத்தில் இருகின்ற இளைஞர் சமூகம் சிந்தித்து செயற்படுகின்ற பொழுது நாங்களும் வளரலாம் எங்களை நம்பி எமக்கு பின்னால் இருக்கின்ற குடும்பமும் வளர்ச்சி அடையும்.

கடந்த காலங்களில் தேர்தல் வருகின்ற பொழுது இளைஞர்களை போஸ்ட்டர் ஒட்டுவதற்காக பசைவாளிகளை தூக்கச் செய்த சமூகமும் எமக்கு மத்தியில் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் இப்பொழுது இருக்கின்ற இளைஞர் சமூகம் சுய சிந்தனையுடனும், தெளிவுடனும், பொறுப்புணர்ச்சியுடன் சிந்தித்து செயலாற்ற தொடங்கியுள்ள சமூகமாக மாறிவருகின்றது. நாங்கள் எப்பொழுதும் எங்களை நாங்கள் ஆளக்கூட சமூகமாக வளர்த்துக்கொள்ள வேண்டும். மாறாக எங்களை பிறமாவட்டங்களில் இருந்தோ.? பிற பிராந்தியங்களில் இருந்தோ.? வந்து எங்களை ஆள நினைக்கின்ற சமூகத்தினை நாங்கள் ஒழித்து கட்ட வேண்டும்.

எங்களுக்கு மத்தியில் இருக்கின்ற பிரச்சனைகளை நாங்களே கூடி தீர்த்துக்கொள்ள வேண்டும். அதே போன்ற உங்களுடைய றியல் பவர் கழகத்திற்குள்ளும் பல பிரச்சனைகள் தோன்றுகின்ற பொழுது அந்த பிரச்சனைகளை நீங்களே கலந்தாலோசித்து தீத்துக்கொள்பவர்களாக மாற்றமடைய வேண்டும். அதைவிடுத்து மூன்றாவது நபரிடம் சென்று உங்களுடைய பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளும் இளைஞர் சமூகமாக செயற்பட முற்படுக்கின்ற பொழுது அது பாரிய பிரச்சனையாக உங்கள் மத்தியில் மாற்றியமைக்கப்படும்.

இதுதான் தற்பொழுது எமது சமூகத்தில் காணப்படும் முக்கிய பிரச்சனையாகும். உங்களுடைய கழகத்திற்குள் பல திறமைகளை கொண்ட உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். ஆகவே நீங்கள் எந்தளவு நாபீர் பெளண்டேசனுக்கு ஒத்துளைப்பு வழங்குகின்றீர்களோ.! அதே போன்று உங்களுடைய கழகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு உறுப்பினர்களும் உங்களுடைய தலைமைத்துவத்திற்கும், நிருவாகத்திற்கும் கட்டுப்பட்டு செயற்பட கூடியவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் கட்டுப்பட்டு செயற்படுகின்ற பொழுது எதிர் காலத்தில் ஒழுங்கான விழுமியமுள்ள இளைஞனாகவும், சமூகத்தால் மதிக்கப்பட கூடிய உறுப்பினராகவும் பார்க்கப்படுவீர்கள் என சமகால இளைஞர் சமூகத்திற்கு முக்கிய தேவைப்பாடான உரையினை நிகழ்த்தினார் நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் அல்-ஹாஜ் உதுமான்கண்டு நாபீர்.