அமெரிக்கா சட்டக் கல்வித் துறையில் பிரகாசிக்கும் முஸ்லிம் பெண்

NEWS



அமெரிக்காவின் ஹாவார்ட் பல்கலைக்கழத்தில் பேராசிரியராக கடமையாற்றும் இன்திஸார் ராப் அந்நாட்டின் சட்டக்கல்வியியலாளர்களுள் ஒருவராக விளங்குகிறார். அத்துடன் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய சட்டக் கற்கைகள் நிகழ்ச்சித் திட்டததின் பணிப்பாளராகவும் கடமையாற்றுகிறார்.

இதற்கு முன்னராக பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்டக் கல்லூரிகளில் விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார். SHARIA SOURCE எனும் சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்குகிறார். இஸ்லாமிய சட்டத்துறை தொடர்பில் விரிவான ஆய்வுகளை இவர் மேற்கொண்டுள்ளார். அத்துடன் அமெரிக்கா மேன்முறையீட்டு நீதிமன்றில் சட்ட இலிகிதராகவும் பதவி வகித்துள்ளார்.

ஜோர்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் சட்டமானி கற்கை நெறியை பூர்த்தி செய்த இவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமானி கற்கை நெறியையும் அதே பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் கலாநிதி பட்டத்தையும் பூர்த்தி செய்துள்ளார். இவற்றுக்கு அப்பால் எகிப்து, ஈரான், சிரியா ஆகிய நாடுகளுக்கு சென்று இஸ்லாமிய சட்டங்கள் தொடர்பான கள ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் கூட சட்டத் துறையி்ல் முஸ்லிம் பெண்கள் எவ்வளவு துரம் ஆளுமையுள்வர்களாக விளங்குகிறார்கள் என்பதற்கு சகோதரி இன்திஸார் ராப் சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறார். சட்டத்துறையில் பிரகாசிக்க விரும்பும் நமது சகோதரிகள் இவரை நிச்சயம் முன்மாதிரியாக கொள்ள முடியும். 
3/related/default