நாட்டின் அமைதியை சீர்குழைக்கும் வகையில்; கடும்போக்குவாதிகளினால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகளுக்கு எதிராக விசேட துஆ பிரார்த்தனையொன்று நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்ரஸதுல் பலாஹ் அரபுக் கலாசாலையில் மௌலவி அல்அமீன் பலாஹியினால் நிகழ்த்தப்பட்டது.
இந்த விசேட துஆ பிரார்த்தனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதன்போது அமைச்சரினால் ஒரு தொகுதி கணனிகள் மத்ரஸாவுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டன.
Firows Mohamed
