பொலன்னறுவை
சுங்காவில் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக நிலவிவரும்
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறும் அதிபர் சேவை தரமுடைய
நிரந்தர அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும் இன்று வியாழக்கிழமை ஆம்
திகதி சுங்காவில் பிரதான வீதியில் மாணவர்களும், பெற்றோர்களும்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த
2 ஆம் மற்றும் 3 ஆம் திகதிகளில் மாணவர்கள் பாடசாலையை பகிஷ்கரித்து
போராட்டம் நடத்தினர். அதற்கு தீர்வு கிட்டாத காரணத்தினால் இன்று வீதியை
மறித்து மாணவர்களும் பெற்றோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை
குறிப்பிடத்தக்கது.