தற்போது 7:30 மணியளவில் வாழைச்சேனை பொலிஸ்
நிலையத்திற்க்கு நான் சென்றிருந்த போது அங்கு ஓட்டமாவடி தேசிய பாடசாலை
ஆசிரியர்கள் சிலரும் நூற்றாண்டை நடாத்திய OBA உயர்பீட உறுப்பினர்கள்
சிலரும் பொலிஸில் முறைப்பாடு செய்துகொண்டிருந்தனர்.
விழா
ஆரம்பமானது முதல் நான்காவது நாள் வரை தொடர் இலக்கமில்லாத அடிக்கட்டை
இல்லாத டிக்கட்கள் விற்பனையானதை கண்டுகொள்ளாது மெளனம் காத்துவிட்டு
முழுதும் முடிந்த பிறகு முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்க இப்போது
கள்ள டிக்கட் விற்கப்பட்டதாக தகவல் என்று தப்பித்துக்கொள்ள ஒரு
முறைப்பாடு.
"நாங்க இந்த அடிக்கட்டை இல்லாத டிக்கட்டை விக்கல இது யாரோ தெரியாம செஞ்சிருக்காங்க அதான் நாங்க இப்ப பொலிசிக்கு வந்துரிக்கம்"
இப்படி சொல்றாங்க.
அடிக்கட்டை இல்லாத டிக்கட் விற்பனை செய்ததை ஏன் அவ்விடத்தில் தடுக்கவில்லை.
இது மக்களுடைய பணம் அல்லவா?
இதற்கு யார் பதில் சொல்வது?
29, 30,01,02ஆகிய திகளில் விற்பனையான டிக்கட்டுக்களை தடுக்காமல் இருந்துவிட்டு இப்போது முறைப்பாடு செய்ய என்ன காரணம்?
ஒன்று
மக்களை மடையர்களாக்கவா? அல்லது பங்கீட்டில் பிரச்சினையா? அல்லது பிறகு
வரப்போகும் விசாரனைக்கு இப்போதே ஆவனம் திரட்டுகிறார்களா?
சட்டம் தன் கடமையை சரியாக செய்ய வேண்டும் ஒரு அநியாயக்கார அரசனிடத்தில் எதிர்த்து நின்று கேள்வி கேட்பதும் ஒரு ஜிஹாதுதான்.
இது எமது ஊர் !
எமது பாடசாலை !
நமது மக்களின் வியர்வை !
ஏழைகளின் பணம்!
அடிக்கட்டை இல்லாமல் அநியாயமாக சுருட்டியது யார்?
அதில் யார் யாருக்கு பங்கிருக்கிறது?
பொறுப்பானவர்கள் பொறுப்புடன் பதில் சொல்ல வேண்டும்.
-அஸ்பாக்-