அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் வருடாந்த இப்தார் நிகழ்வும் விசேட துஆ பிரார்த்தனையும்

NEWS
0


(எஸ்.அஷ்ரப்கான்)

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் வருடாந்த இப்தார் நிகழ்வு (11.06.2017) அக்கரைப்பற்று கிங் ஏசியா செப் ஹோட்டலில் பேரவையின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் எம்.ஏ. பகுர்டீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீன், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, முன்னாள் பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவூத், பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் உதுமாலெப்பை உட்பட அரசியல் பிரமுகர்கள், கல்வி அதிகாரிகள், உயர் அதிகாரிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். இங்கு விசேடமாக அன்மையில் மரணித்த சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஓய்வுபெற்ற விரிவுரையாளருமான எம்.ஐ.எம். முஸ்தபாவிற்கு விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.

இதன்போது பிரதேசத்தின் ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். 
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default