கேகாலை பகுதியில் இளம் யுவதி படுகொலை

TODAYCEYLON

இளம் வயதுடைய யுவதி ஒருவர் கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
17 வயதுடைய குறித்த யுவதியை அவரது காதலன் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொலை செய்த குறித்த நபரும் நஞ்சருந்திய நிலையில் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவருக்குமிடையியே ஏற்பட்ட காதலை தொடர்ந்து யுவதியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே குறித்த யுவதியை அவரது காதலன் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட யுவதியின் சடலம் கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags
3/related/default