கொத்மலை நீர்தேகத்தில் நன்னீர் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு

TODAYCEYLON


(க.கிஷாந்தன்)

17.08.2017 இன்று காலை 10 மணியளவில்  மத்திய மாகாண தமிழ் கல்வி, விவசாயம், மீன்பிடி, சிறுகைதொழில், இந்து கலாசார அமைச்சர் எம். ரமேஸ்வரன் தலைமையில் கொத்மலை நீர்தேகத்தில் மீன்குஞ்சுகள் விடப்பட்டது.

இதன்போது சுமார் எழுபதாயிரம் மீன்குஞ்சுகள் நீர்தேகத்தில் முதற்கட்டமாக விடப்பட்டது. இதில் டிலாபியா, கேட்லா, காப் போன்ற இன மீன்குஞ்சுகள் இவ்வாறு விடப்பட்டன.

இதன் மூலம் சுமார் 50ற்கும் மேற்பட்ட நன்னீர் மீன்பிடிக் குடும்பங்கள் அவர்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு அமைச்சர் உட்பட அமைச்சின் அதிகாரிகள், நீர் வள அமைச்சின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Tags
3/related/default