கட்டாரில் இருந்து வந்தவர் சடலமாக மீட்பு

TODAYCEYLON

வவுனியா, சமயபுரம் அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள வீட்டின் மாமரத்திலிருந்து இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா, சமயபுரம்  அம்மன் கோவிலுக்கு அருகில் வசித்து வரும் மாரிமுத்து பிரசாந்தன் எனும் 26வயதுடைய இளைஞன் இன்று காலை அவரது வீட்டிலுள்ள மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே கட்டார் நாட்டிலிருந்து விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags
3/related/default