வடக்கு இராணுவ முகாம்களை அகற்ற அவசரப்பட முடியாது- மஹிந்த

TODAYCEYLON

வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அவசரப்பட்டு நீக்கிவிட முடியாது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுமாறு மேற்கத்திய நாடுகள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. அவர்கள் தெரிவிப்பதுபோன்று அவசரப்பட்டு இராணுவ முகாம்களை அங்கிருந்து எங்களால் அகற்ற முடியாது.
புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்கள் சமுகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு சரியானதா என்பது தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார். 
Tags
3/related/default