திங்கள் முதல் அரச அலுவலகங்களின் கடமை நேரங்களில் மாற்றம்

TODAYCEYLON

பத்தரமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள அரச அலுவலங்களின் கடமை நேரங்களை மாற்றுவது தொடர்பிலான செயற்றிட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இதற்கமைய, அலுவலக ஊழியர்கள் காலை 7.30 முதல் 9.15 வரை சேவைக்கு சமூகமளிக்க முடியும்.
பிற்பகல் 3.35 முதல் 5 மணி வரை அலுவலக பணிகளை பூர்த்தி செய்ததன் பின்னர் வெளியேற முடியும்.
நிறுவனத் தலைவர்களின் அங்கீகாரத்துடன் மூன்று மாதங்களுக்கு இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்
Tags
3/related/default