நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள பிரதான கூட்டுக் கட்சிகள் இரண்டையும் ஒரு கட்சியாகவும் அதற்கு எதிரானவர்களை எதிர்க் கட்சியாகவும் கொண்டு மக்கள் தேர்தலின் போது வாக்குகளை வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அவர் நேற்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றில் இதனைக் கூறியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரே கட்சிகள். அவை பிரிந்துள்ளது போன்று காட்டிக் கொள்கின்றார். ஆனால், அதிகாரம் கிடைத்ததும் சேர்ந்துகொள்வார்கள். மக்கள் இதனை நன்கு அடையாளம் கண்டு கொள்ளவேண்டும் எனவும் அவர் வெளியிட்டுள்ள நீண்டி அறிக்கையில் கோரியுள்ளார்.
