எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் தேர்தல் பிரசாரங்களில் பொலித்தீன் பதாகைகள், சுவர் ஓட்டிகள், பொலித்தீனிலான விளம்பர பொருட்களையும் மற்றும் பிரசார செயற்பாடுகளை முன்னெடுக்க வர்ணமயமாக அலங்கரிக்கும் பொலித்தீன் கொடிகளையும் பயன்படுத்த வேண்டாம் எனவும் அவ்வாறான செயற்பாடுகளை தடைசெய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுற்றுச்சூழல் அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வள பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவ்வாறான நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
