சிறையிலிருக்கும் ரிஷாத் பதியுத்தீனுடைய மாமனாருக்கு கொரோனா தொற்று உறுதி

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் தீ காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (27) தெரியவந்துள்ளது.




ரிஷாட் பதியூதீனின் மாமனாருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால், அவரை பிணையில் விடுவிக்குமாறு, மனுவொன்றின் ஊடாக, அவரது சட்டத்தரணிகள் கொழும்பு மேலதிக நீதவான் லோச்சணி அபேவிக்ரமவிடம் இன்று கோரியிருந்தனர்.


கொரோனா தொற்றை காரணமாக கொண்டு, சந்தேகநபரை பிணையில் விடுவிக்க முடியாது எனக் கூறிய நீதவான், பிணை மனுக் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

சந்தேகநபர் கொவிட் தொற்றுக்குள்ளாகி சுகயீனமுற்றுள்ளமையினால், அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என சட்டத்தரணிகள், மனுவின் ஊடாக கோரியுள்ளனர்.

அத்துடன், சந்தேகநபராக ரிஷாட் பதியூதீனின் மாமனாராக அலி இப்ரஹிம் சாய்பு கிதர் மொஹமட் சிஹாப்தீன், கொவிட் தடுப்பூசியின் முதலாவது மருந்தளவை (DOSE) பெற்றுக்கொண்டுள்ளதாகவும், அவர் இரண்டாவது மருந்தளவை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் சட்டத்தரணிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால், சந்தேகநபரின் உயிருக்கு ஆபத்து காணப்படுகின்றமையினால், அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.


எனினும், கொரோனாவை காரணம் காட்டி, சந்தேகநபரை பிணையில் விடுவிக்க முடியாது என கூறிய நீதவான், சந்தேகநபருக்கு சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில், ரிஷாட் பதியூதீனின் மாமனாரின் பிணை மனு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது


கருத்துரையிடுக

0 கருத்துகள்