ஹிஜ்ரா வட்டார மக்களுக்காக நான் என்றும் களத்தில் நிற்பேன்; அஸ்மி சூளுரை



அக்கரைப்பற்று மாநகரசபைக்கு வேட்பாளர் தெரிவு செய்வதில் தேசிய காங்கிரஸ் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டது இது தலைவரின் திறமையே, நாங்கள் அதாஉல்லா எனும் தலைமையின் கீழ் கட்டுப்படும் அடிமட்ட தொண்டர்கள் என அஸ்மி குறிப்பிட்டுள்ளார்,

முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், ஹிஜ்ரா வட்டார வேட்பாளருமான அஸ்மி ஏ.கபூர் தனக்கு ஆதரவளித்த மக்களுக்கும், கட்சி முக்கியஸ்தர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார். இதே போல ஹிஜ்ரா வட்டார மக்களுக்கு என்னை பற்றியும் எனது அரசியல் பற்றியும் தெரியும் அவர்களுக்காக என்றும் களத்தில் நிற்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.