அன்று அதாஉல்லா நல்லம் என்று கூறினார், பின்னர் ஹக்கீம் நல்லம் என்று கூறினார், இன்று ரிசாட் நல்லம் என்று கூறுகிறார் நாளை யாரைக் கூறுவார் என விமர்சித்துள்ளார் வேட்பாளர் சுல்பிகார்,
அக்கரைப்பற்று மாநகர சபை வேட்பாளர் சுல்பிகார் சிலோன் முஸ்லிம் செய்தியாளருக்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டார். ஹனீபா மதனி போன்ற துரோகிகளுக்கு இறைவன் தக்க பாடம் கற்பிப்பான் காரணம் அவர்கள் சமூகத்தின் சாபக்கேடுகள் அவர்களின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது முதல் பாடம்.
இன்னும் நுாற்றுக்கணக்கான பாடங்கள் அவர்கள் கற்க வேண்டியுள்ளது, வன்னியார் அவரை எவ்வாறு கவனிப்பார் என்று பாருங்கள், ஒரு மார்க்கப்போதகர் செய்யுத் காரியம் இதுவாகாது எனவும் குறிப்பிட்டார்.
