அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் – இராணுவத்துக்கு இராணுவ தளபதி அறிவிப்பு

NEWS

தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக இராணுவ வீரர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு பாதுகாப்பு பிரிவு தலைமையகத்தில் இராணுவ பிரிவினரை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவது இராணுவ வீரர்களின் கடமை எனவும் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியான முறையில் நிறைவேற்றாமல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் இராணுவ தளபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் இராணுவ வீரர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதை போன்று ஒழுக்கத்தை பேணி பிரதேசத்திலுள்ள அனைத்து மக்களுடனும் சுமுகமான நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களிடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Tags
3/related/default