சம்மாந்துறை, மாவடிப்பள்ளி பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை



சம்மாந்துறை மாவடிப்பள்ளி பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் இளம்பெண் ஒருவர்  தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் இன்று (31.01.2018) 04 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக எமது மாவடிப்பள்ளி நிருபர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் கூறுகையில் காதல் விவகாரம் காரணமாகவே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாகவும்  தெரிவித்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள் மாவடிப்பள்ளி பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சிலோன் முஸ்லிம் மாவடிப்பள்ளி நிருபர்