​ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுவர்களும் இருப்பார்கள் - மக்கள் நிதானமாக வாக்களிக்க வேண்டும்.

NEWS


ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுவர்களும் இருப்பார்கள் . ஆகையால் மக்கள் நிதானமாக வாக்களித்து தமது எதிர்காலத்தை விருத்தி செய்து செழிப்பாக்கிக் கொள்ள வேண்டுமென எம்.பி.மஸ்தான் குறிப்பிட்டார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு  பூவரசங்குளம் வட்டாரத்தில  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் கே.ஞானமலரை ஆதரித்து இன்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது இத்தேர்தலில்  போட்டியிடும் எமது கட்சியின் வேட்பாளர் ஞானமலர் அவர்களை நீங்கள் வெற்றிபெறச் செய்வதன் மூலம் நாம் திட்டமிட்ட அபிவிருத்திகளை இப்பகுதியில் இலகுவாக செய்யமுடியும்.

தேர்தல் காலங்களில் மாத்திரமே உங்களைத் தேடி வருபவர்களை நீங்கள் நிராகரித்து சேவை செய்யக்கூடியவர்களை நாம் எமது பிரதிநிதிகளாக்க வேண்டும். பசப்பு வார்த்தைகளுக்கு ஏமாறாமல் மிகவும் நிதானமாக சிந்தித்து எமது வாக்குகளை பிரயோகிப்பதற்கு முதலில் நாம் தயாராகவேண்டும்.

ஆகையால் உங்களது வாக்குகளை வீணாக்காமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் எமது வேட்பாளர்ளுக்கு நீங்கள் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் பூவரசஙகுளம் பகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Tags
3/related/default