ஹிந்து குழந்தைகளை தத்தெடுத்த முஸ்லிம் குடும்பம்

NEWS


தெற்கு காஷ்மீரின் லியுத்வாரா பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று 40 வயது கவல் என்ற ஹிந்து பெண்மணி இறந்துவிட்டார்.

முன்னதாக சரியாக ஓராண்டுக்கு முன்பு அவரது கணவரும் இறப்பெய்திவிட்டதை தொடர்ந்து அவர்களது 4 குழந்தைகளும் அனாதைகளாகும் சூழ்நிலை உருவானது.

இறுதி சடங்கை நிறைவேற்றக்கூட உறவுகளின்றி இருந்த கவலின் சடலத்தை ஹிந்து முறைப்படி அடக்கம் செய்ய ஒன்று கூடிய முஸ்லிம்கள், மேற்படி கவலின் குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு முஸ்லிம் குடும்பமும் அவரவர்களால் செய்ய முடிந்த உதவிகளை அரிசி, பருப்பு, உடைகள், பணம் என்று திரட்டிக் கொண்டிருந்த வேளையில்,

'அஹ்மத்' என்பவர், 4 குழந்தைகளையும் தானே தத்தெடுத்துக் கொள்வதாக அறிவித்து, அக்குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்கால ஏற்பாடுகளையும் செய்வதாக ஊர் மக்கள் முன்பு உறுதி அளித்து, அக்குழந்தைகளை அரவனைத்துக் கொண்டார்.

பின்னர், ஹிந்து முறைப்படி அப்பெண்ணின் இறுதி சடங்கு நிறைவேற்றப்பட்டது.
Tags
3/related/default