பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் எச்சரிக்கை விடுக்கின்றோம் - உதய கம்மம்பில

NEWS
0 minute read


மஹிந்த ராஜபக்ஷ மீது கை வைக்க தயாராவதாயின் ஒழித்துக் கொள்வதற்கு வேறு ஒரு நாட்டைத் தேடிக் கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் எச்சரிக்கை விடுக்கின்றோம் என தூய ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி அறிக்கையின் 1135 பக்கங்களையும் நன்றாக வாசித்துப் பார்த்தேன். அதில் எந்தவொரு இடத்திலும் மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமை பறிக்கப்படுவது தொடர்பில் கூறப்படவில்லை.  மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமை பறிக்கப்படுவது குறித்து பிரமதர் ரணிலின் உள்ளத்திலேயே இருக்கின்றது.
இரத்தினபுரி மாவட்டத்தில் (30.01.2018) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். 
To Top