(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
க.பொ.த. உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் இறுதி திகதி இன்று (23) வெள்ளிக்கிழமையுடன்முடிவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர் மூலமாகவும் தனியார் விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 23 ஆம் திகதி அன்றோஅல்லது அதற்கு முன்னரோ கிடைக்கக்கூடியவாறு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் பரீட்சைகள்திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறுகின்ற சகல விண்ணப்பங்களும் இரத்துச் செய்யப்படும் என அத் திணைக்களம் மேலும்தெரிவித்துள்ளது.
