அம்பாறையில் தாக்குதல் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் கண்டனம்!








அம்பாறை நகரில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல் மற்றும் கடைகளை பாராளுமன்ற உறுப்பினர் A.L.M.நஸிர் ஸ்தலத்துக்கு அதிகாலை 4 மணியளவில் விஜயம் செய்து பார்வையிட்டதுடன், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் பார்வையிட்டார். 

இச்சம்பவம் தொடர்பாக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரை சந்தித்து குறித்த சம்பவம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள கூறியதுடன் இவ்வாறான நாசகார செயல்கள் மீண்டும் தலைதூக்க விடாமல் இதற்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தனது கண்டனத்தையும் தெரிவித்தார்