பிரதமர் ரணில் தற்போதைய நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தனக்கு நெருக்கமான பிரமுகர்களுடன் கலந்தாலோசனையொன்றை நடத்தியுள்ளார்.
நேற்றைய -19 நாடாளுமன்ற அமர்வின் இடைப்பட்ட நேரத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. நாடாளுமன்றத்தின் குழுக்களின் அறையொன்றில் பிரதமரின் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய சகாக்களான மலிக் சமரவிக்கிரம, சாகல ரத்நாயக்க ஆகியோருடன் அதுரலியே ரத்ன தேரர், அமைச்சர் ரிசாத் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலின் போது ரணில் விக்கிரமசிங்க தான் தொடர்ந்தும் பிரதமர் பதவியை வகிப்பதற்கான ஆதரவை ரிசாத், ரத்ன தேரர், டக்ளஸ் ஆகியோரிடம் கோரியதுடன் அது தொடர்பான உத்தரவாதமொன்றையும் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
TM.Imthiyas
